காதல்

பெண்ணே
உன் கார்குழலில்
கார் மேகங்களின் பிறப்பிடமா....

கண்ணே
உன் கண் மணிதனில்
சூரிய சந்திரர் ஊர்வலமா ....

விண்ணே
உன் உதடு சிந்தும் சிரிப்பதனில்
விண் மீன்களின் கூட்டமா...

தேனே
உன் வார்த்தை உதிரும் மொழியதனில்
செந்தமிழின் இனிமையா ....

மானே
உன் இடை வளைவுதனில்
நதிகளின் நயாகாராவா ....

என்னே
உன் அன்பான அழகதனில்
அனைத்துலகும் சங்கமமா...

முன்னே
உன்னை காணும் முன்னே
நானும் சாதாரணமாய் ....

பின்னே
உன்னை கண்ட பின்னே
என் வாழ்வே சாதனையாய் ....

எழுதியவர் : கிரிஜா.தி (16-Oct-16, 9:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே