காதல் மழை

நீ என்னை பார்க்கும் போதெல்லாம்
எனக்குள் காதல் மழை..
என்னருகே நீ நெருங்கி வரும் பொழுது எனக்குள் ஆனந்த மழை..
உன்னிடம் பேசும் நேரமெல்லாம்
எனக்குள் மெல்லிய சாரல் மழை..
உன் விரல் என்னை தீண்டும் போதெல்லாம் எனக்குள் பனி மழை..
உன்னை பார்கா நேரமெல்லாம்
என் மனதில் ஆலங்கட்டி மழை...
உன் நினைவுகள் என்னுள் இருக்கும் வரை விடாது அடை மழை..
நீ என்னை நீங்கினால் தாக்கும்
புயல் மழை...
உன் ஓரப் பார்வைகள் எனக்குள்
தூரல் மழை..
உன் நினைவுகள் எனக்குள் நிறைந்திருக்கும் வரை மனசெல்லாம் மழையே...
நாம் இருவரும் சேர்ந்து கை கோர்த்து வீதியில் நடக்கையிலே வானிலிருந்து தூவும் பூ மழை...