சொல்விளையாட்டு

ஹைக்கூ சொல்விளையாட்டு
********************************
பெயரில்லாதவன்
***
பெயரைக்கேட்டால்
பெயரில்லாதவன் என்கிறான்
அவன் பெயரில் ஆதவன்.
********************************
மழை
***

நீர் ஆவியாய் மாறி
ஆவி நீராய் மாறி
பொழிகிறது மாரி.


********************************
படிகள்
***

பள்ளிக்கூட படிகள்
சொல்கிறது
படி, கல்.
********************************
வெற்றிலை
***

விருந்துக்குப்பின்
எடுக்கப்பட்டதும் கொடுக்கப்பட்டதும்
வெற்றிலை.*

*வெற்று இலை
வெற்றிலை.




நிலாரவி
********************************

எழுதியவர் : நிலாரவி (18-Oct-16, 6:23 am)
பார்வை : 362

மேலே