யாரிடமாவது

யாரிடமாவது....


நீண்ட நேரமாக
அலைபேசியை
கையிலேயே வைத்திருக்கிறேன்
யாரிடமாவது பேசவேண்டும்

அப்பாவிடம் பேசலாம்
அழத் தோன்றும்

அண்ணனிடம் பேசலாம்
வார்த்தையில் விஷம் வைப்பான்

நெருங்கிய நட்பு வட்டம்
"மக்கள் அனையர் கயவர் "

அலுவலக நண்பர்
அடுத்த நாள் சந்திக்க வேண்டிய கத்தி பற்றி
தகவல் தருவார்

தூரத்து நண்பன்
தொந்தரவாய் எண்ணுவான்

என் ஊர் தோழன்
நான் வீழ்ந்த கதையை
நினைவுபடுத்துவான்

அலைபேசியை
அணைத்துவிட்டு
உறக்கம் தொலையும்
இரவுக்காக காத்திருக்கிறேன் .
MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்

எழுதியவர் : பூ.முல்லை ராஜன் (18-Oct-16, 10:52 pm)
Tanglish : yaaridamaavadhu
பார்வை : 93

மேலே