பேறு
பெண்ணாகப் பிறப்பதே பேறு என்பர்
கண்ணாக வளர்த்தல் கடமை என்பர் !
நன்னெறி நங்கையே நன்மக்கட் பேறாகும்
முன்னேறிச் சென்று முன்மாதிரி விளங்கும் !
அகமும் மகிழ்ந்திடும் அகிலமும் புகழ்ந்திடும்
சாதிக்கும் மகளானால் பெற்றவர்க்குப் பேறு !
நாட்டிற்கேப் பேறு நானிலமே வாழ்த்தினால்
சாதனை புரிந்திடும் பெண்களின் சாகசத்தால் !
பழனி குமார்