விட்டு செல்லதே பெண்ணே

விட்டு செல்லதே பெண்ணே:
விட்டு செல்லதே பெண்ணே என்னை
தனிமையில் விட்டு செல்லதே
தீயாய் உன் விழிகளில் என்னை கொல்லாதே பெண்ணே
என்னை கொல்லாதே
நிழலே உன்னை விட்டு செல்லும் முன்
நிகழகா வந்தேனே உன் முன்னே
உன்னில் நிறமே கண்டதில்லை
உன் இதழில் உணவே உண்டதில்லை
ஆனா என் உயிரை கொன்றாயடி
என்னை கொஞ்சும் கொலைகாரியே
கொஞ்சம் கொஞ்சமாக தின்றாய் அடி
கொஞ்சும் குழந்தையின் சிரிப்பாய் என் நெஞ்சை
அலைபேசியில் அழைத்தாயடி அன்று ஒர் நாள்
அலைகடலாய் அழைந்தேனடி இன்றும் நான்
அலைபேசியில் வரும் அலைவொலி கூட
காதல் அலைவொலியாய் அழைக்குதடி
கண்களில் தோன்றிய காதலை
கல்லறையில் விட்டு செல்லதே பெண்ணே
கனவில் வாழ்ந்த என்னை
உன் நினைவில் வாழவைத்தாயடி
வலிகள் மிகுந்த வாழ்க்கையாய் என்றும்
விட்டு செல்லதே பெண்ணே என்னை
தனிமையில் விட்டு செல்லதே…

எழுதியவர் : சண்முகவேல் (19-Oct-16, 11:30 am)
பார்வை : 98

மேலே