அவள் பறந்து போனாளே
எல்லாம் வடிவாய் அமைந்த கவிதை ஒப்ப
அழகே உருவாய் வந்து நின்றாள் அவள்
காந்த விழிகளால் ஒருமுறைப் பார்த்தாள்-என்னை
அக்கணமே என் மனதைப் பறித்து கொண்டாள்
காண்பது நிஜமா என்று எண்ணும் முன்னே
கன்னி அவள் அங்கிருந்து மறைந்து போனாள்
காதல் தீ வந்து என்னை வாட்ட
என் காதல் கிளியே நீ
சிட்டாய்ப் பறந்து எங்கு சென்றாய்
என்று பித்து பிடித்தவனாய் அன்னவளை
தேடி அலைந்தேன்! தேடி அலைந்தேன்!
இன்றுவரை தேடி அலைகின்றேன்
என் காதல் கிளி இன்னும் காணவில்லை
வந்திடுவாய் எந்தன்' கவிதா' மணியே
எந்தன் பித்தம் தீர்த்திடுவாய்
சித்தம் தெளிந்திடவே அன்று நீ
என் மீது வீசி சென்ற பார்வை
உண்மையில் நீ என் மீது கொண்ட
காதல் பார்வையே என்று!
அது வரைக் காத்திருப்பேன்
உந்தன் காதல் கிளியாய்
சேர்ந்திடுவோம் நாம் ஜோடிக்கிளியாய் !