அடடா மழைடா அடைமழைடா

சும்மா தமிழ் எப்படி வெளையாடுது பாருங்க...

*மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..*

பிராமணர்கள் : எதேக்ஷ்டமா பெய்யரது

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது

மந்திரவாதி : பேயா பெய்யுது.

பல் டாக்டர் : சும்மா புடுங்கி எடுக்குது.

பேங்க் ஆபீசர் :வட்டியும் முதலுமா கொடுக்குது

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது

WIFE: செம அடி அடிக்குது.

HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..
!!
!!
!!
!!
!!
அப்படினா..
நாதஸ்வர வித்வான் எப்படி சொல்வார்.??

எழுதியவர் : முகநூல் (20-Oct-16, 1:49 am)
பார்வை : 250

சிறந்த நகைச்சுவைகள்

மேலே