ராமு-சோமு உரையாடல் -காவேரி தண்ணீர் தமிழ் நாட்டுக்கு எப்போ வரும்னு
ராமு : டேய் சோமு., உனக்கு இந்த கத
தெரியும்ல .............
சோமு : எந்த கத அண்ணே , இப்படி
தேடடெர்னு கேட்டா ?
ராமு : அதாண்டா காஞ்சிபுரத்துல பக்தர் ஒருவர்
வரதராஜ பெருமாளை வணங்கும்போது
சற்றே இறைஞ்சி "கஞ்சி வரடப்பா....."
என்றாராம் , அதை ஒரு பிச்சைக்காரன்
கோவில் பிரகாரத்துக்கு வெளியே கேட்டுட்டு
" எங்கு (கஞ்சி) எங்கு வரதப்பா? என்றானாம்
சோமு : அதுக்கு இப்போ என்ன அண்ணே
ராமு : இருக்குடா சொல்லறேன் கேளு
நம்ம உச்ச நீதி மன்றம் காவேரி தண்ணீர்
திறந்து விட கர்நாடகாவிற்கு தெரிவித்து கூட
அவங்க லேசுல நீர் விடுவதை இல்ல
இது தெரியாத தஞ்சை விவசாயி ,வெறும்
செய்தி தாள் நியூஸ் கேட்டுட்டு ,வீட்டை விட்டு
சந்தோஷத்துல தண்ணீர் எங்க வரதுயா , எங்க
வரதுயா னு ஊராரை கேட்டுகிட்டே இருந்தாராம்.....
கஞ்சி வரதப்ப............எங்கு வரதப்ப மாதிரி
சோமு : அண்ணே பாவம் அண்ணே விவசாயீ
கஞ்சிக்கு அலையும் பிச்சைக்காரன் போல
காஞ்ச நிலத்துக்கு நீர் கு அலையறாருங்க
ராமு : அமான் சோமு ரொம்ப சரியாய் சொன்ன