அன்னை

அன்றாடம் அவதரிக்கும் ஆதவன்கூட ஆழியிலிருந்து
என்றாவதோர்நாளில் எழுந்தருள மறந்துப்போகலாம்...

சிறுநேரம் அயராது திறம்படச் சுற்றும் பூமியன்னைகூட
ஒருநேரம் இயங்கமறுத்து நம்மிடம் ஒருத்தல் படலத்தினை தொடங்க நேரிடலாம்...

எந்நாளும் ஓய்வின்றிச் சுழலும் எனதான ஒருகிரகம்
எவருக்கும் கிடைக்கக்கூடும் இதுபோன்ற தனிகிரகம்...

சம்பளமில்லா சமையற்காரியாய் சமுகத்தில் தோன்றினாலும்
கம்பளமில்லா இராணியாய்தான் என்றும் என்வாழ்வில் எனதன்னை...

எத்துனைத் துன்பங்கள் எதிர்த்து வருவதாயினும்
முத்தென நம்மை அணைத்து முதலாவதாய் காத்திடுவாள்...

காரணங்கள் பலவிருந்தும் அவைகளையெல்லாம் அள்ளிக்கொண்டு
தோரணங்கள் பலகட்டி தொங்கவிடவா முடியும்...

உயிர்முச்சுக் காற்றுகூட இவ்வுலகில் தீர்ந்துபோக
தனதுயிரை தாரைவார்த்து கொடுக்க தவமிருப்பாள் எனதன்னை...

எனக்கு மட்டுமல்ல...
எனைப்போன்ற சேய் ஈன்ற எல்லா தாய்குலத்திற்கும் பொருந்தும்...

#அன்னை_ஓர்_அவதாரம்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (20-Oct-16, 7:26 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 135

மேலே