கை விட்டு போன என் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
நடந்து பேசிய நிமிடங்கள்
கண்முன் நாலைந்து தடவை வந்து போகின்றது!!!
விரல் கோர்த்து கதை பேசிய
இனிமையான வினாடிகள் இன்று எதிரில் ரணமாய் நிற்கின்றது!!!
அன்று நீ என் தலையில் சூட்டிய பூக்களெல்லாம்
இன்று வாடிய செங்காந்தலாய் சிதறி கிடக்கிறது!!!
இத்தனை வேதனையும் வாட்டுவது
பாவை என்னை மட்டும் தான் உன்னையல்ல!!!
ஆம்!!!
என் தலையில் அடித்து நான் உன்
கணவனாவேன் என்று கூறிய உன்னோடு
வாழ்கிறாள் மாற்றான் வீட்டு பெண்
மருமகளாக உன் வீட்டினிலே!!!