என் தனம்

ஓர் இளவேனில் காலை
என்றும் போல இன்றும் உன் நினைவுகள் உடன் என் விழிப்பு தனம்
நீ சொன்னது போல இன்றும் என் கனவில் நீதான்
கனவில் நமக்கொரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது
கையில் வாங்கிய கனம் ஒரு உணர்வு
நெகிழ்ச்சி
மன நிறைவு எல்லாம் வருகிறது
மன்னிச்சி மா!!!
மறந்துவிட்டேன்.இதோ கிளம்பிட்டேன்
எத்துணை முறை சண்டை வந்தாலும் நீ என்னை மன்னிப்பாய்
கிளம்பிவிட்டேன்
ஏதோ தெரியவில்லை இன்று உனக்கு ரோஸ் வாங்கிதரனும்னு தோனுது
வண்டியில் கிளம்பிவிட்டேன்
உன்னை பார்க்க ஆவலோடு
உன் முன் வந்துவிட்டன
உன் மடியில் என் ரோஜா
பெயர் பலகையில்
தோற்றம் மறைவு
தனலட்சுமி