காதலில் கலந்து விடு

நீ கைகளில் காட்டும் இதய வடிவில் கூட,
நான் காற்றாய் நிறைகிறேன்...அதற்கு உயிர் கொடுக்க!!

என் இதயமெல்லாம் நீ ஆள்கையில்...யார் எனக்கு மரணம் கொடுக்க!!

ஆயிரம் சூரியன் சுடுவதுகூட பனித்துளியாய் உணர்கிறேன்...
கண்ணே!

நீ உதிர்க்கும் மறுப்பு என்ற
வார்த்தைச் சூட்டில், சுருண்டு கிடக்கிறேன்....இறுதி ஊர்வலப் பூக்களாய் !
நீ என்னை மிதிக்கும் கணம்தான்,
நான் மோட்சம் ஏறுவேன் பெண்ணே...
உயிரை மாய்த்துக் கொள்வது தவறுதான்...

ஆனால் ,
என் உயிராய் நீ இருந்தும்,
எனை விட்டு பிரிகையில்....என்னுயிர் வெறும் மயிர்தான்......தேவதையே!!

எழுதியவர் : பாரதி paravai (20-Oct-16, 4:58 pm)
பார்வை : 85

மேலே