யதார்தம் நாடி
![](https://eluthu.com/images/loading.gif)
மானும் வேலும்
விழியாக்கி
வள்ளையின் வளைவை
காதாக்கி
வலம்புரி சங்கை
கழுத்தாக்கி
முழுமதி பொலிவை
நுதலாக்கி
சுவைதரு கனியிதழ்
சுளையாக்கி
எட்பூதனை மூக்காக்கி
காந்தளின் மென்மை
கரமாக்கி
அகவிடும் மெல்லடி
ஆமையாக்கி
நிறைசுமர் கணுக்கால்
நண்டாக்கி
பஞ்சடியின் மென்மை
அணிச்சமென்று
பசையுறு கன்னம்
பளிங்கென்று
வருணனை சிருஷ்ட்டிப்பில்
வாரிவிட்ட
வற்றா கடலாம்
கவியுலகே!
என்று கொள்வாய்?
இணையறு படைப்பென
ஏந்தலை!
என்று வெல்வாய்?
இயல்பினிலவள் காதலை!!