Romance நல்லது
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்ணிலா மாங்கல்யாவில் தரையிறங்கி ,
உடையிலே தேயப்பிறையாகி,
தேகத்தில் பௌர்ணமியாய்
கண்ணாளனிடம் உலவுவதே.....முதல் இரவு பெண்ணே!!
விடியலும் விரதம் இருக்கும்
வெளியே..........உன் நாணத்தின் நகையை பார்க்க கண்ணே !!
அன்பே!
கண்ணாடி முன் நான் பார்க்கும் பிம்பத்தில்,
காதல் மின்சாரம் பாய்ந்திருப்பதை
உணர்ந்தேன்......உன் மின்னல்வெட்டு இன்றி !
நீ மட்டுமல்ல, உன் நினைவு கூட என்னை ஆழ்கிறது....என் ஸ்பரிசம் குடித்து!!
சூரியன் என்இயற்கையை எட்டிப்பார்க்க,
வெண்மேகம் நானோ என் செய்வேன் ?..
வெட்கத்தில் வெளிறிப்போய் வானவில்லாய் போர்த்திக்கொண்டேன்..... துப்பட்டாவின் வண்ணங்களை பூசிக்கொண்டு !!
மனதிற்குள்ளே காதல்மழை....
என்னவனுடன் நானும் நனைகிறேன் முழுமையாக !!