ஏற்றுக் கொள்வாய் என்னுயிரை
இரவெல்லாம்
கண் விழித்தேன்
இனியவளே!
உனை நினைத்து.
உறக்கமும்
நான் கெடுத்தேன்
உள்ளத்திலே!
உனை நினைத்து.
ஆந்தை போல்
கண் விழித்தேன்
அன்னமே!
உனை நினைத்து.
என்னையே
நான் மறந்தேன்
உன்னை மட்டுமே
தினம் நினைத்து.
இத்தனையும்
ஏன் செய்தேன்?
எனக்காய்
நீ வேண்டுமென்று.
மெழுகாய் உருகுது
என் உயிர்
உறைந்து கொள்ள
இடமின்றி!
என்னவளே!
ஏற்றுக் கொள்வாய்
என்னுயிரை
உன்னுடலில் ஓர் உயிராய். . . . . . . . .