தீபாவளி--அறிவு ஒளியேற்றிடுவோம்---- -சிந்திக்க ==== விழிப்பு உணர்வுக் கட்டுரை -----தொகுப்பு

நீங்களெல்லாம் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவீர்கள்?
மன்னிக்கவும். வெடி போடாதீர்கள்.
அதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது,
அதில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிழிகிறார்கள்,
பாதுகாப்பாய் வெடி போடுங்கள்.
வயதானவர்கள், கைக்குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதோர் அருகிலிருந்தால் தயவு செய்து ஒலி உண்டாக்கும் வெடி வகைகளை தவிர்க்கவும்.
காவல்துறை சொல்லும் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும்.

உங்கள் பொறுப்பின்மையால் உங்களை காயப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. பிறரை காயப்படுத்தும் உரிமை யாருக்கும் அறவே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோயில் கோபுரங்களைக் காக்கவும் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் .சுப மற்றும் அசுப காரியங்களின் போது அதிரடி வேட்டுக்கள்,வெடிகள் வெடிப்பதைத் தடை செய்ய வேண்டும் வெடிச் சத்தத்தினால் ஏற்படும் அதிர்வுகளால் கோபுரங்கள் சிற்பங்கள் கட்டாயம் பாதிக்கப் படுகின்றன ,மேலும் வெடிகள் வெடிக்கக் கூடாது என்ற சட்டம் தற்போது பொதுவாக இருந்த போதும் பலர் அதை பின்பற்றாமல் அலட்சியம் செய்து விதிகளை மீறுகின்றனர்
---------------------------------------------------------------------------------------------------
Re: Neeya Naana - November 2015



Gowrymohan

பட்டாசு கொளுத்தாமல் தீபாவளி கொண்டாடுவது கஷ்டம்தான். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை நினைத்திருப்பது தீபாவளி என்றால் பட்டாசு என்பதுதான். ஆனால் முன்னேறிவரும் நவீன கண்டுபிடிப்புகளால் பட்டாசுகளின் வீரியமும் தாக்கமும் அதிகரிப்பதால் அவை ஆபத்தையே தருகின்றன.

தாக்கம் குறைந்த பட்டாசுகளை பாதுகாப்பாக, குறைந்த அளவில் தயாரித்து கூடிய விலையில் விற்பதன்மூலம் ஆபத்தை தவிர்க்கலாம். அளவோடு பட்டாசுகளை வாங்கி தீபாவளி கொண்டாடலாமே.

தேனு
என்னைப் பொருத்தவரையில் அவசியமா... அவசியம் இல்லையா என்பதை விட, அதனால் வரும் பாதிப்புகள் தான் கண்முன் நிற்கிறது. அதனால் தேவையில்லை என்றுதான் சொல்ல நினைக்கிறேன். குழந்தைகளின் சந்தோஷத்தையும் யோசித்து பார்க்க வேண்டியிருக்கே. அதனால் பாதிப்பில்லாத வகையில் பயன்படுத்தலாம் என்றும் சொல்ல ஆசை தான்...!

PriyagauthamH

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். அது போல் தான் இந்த பட்டாசும். ஒரு பக்கம் உற்பத்தி இடங்களில் நடக்கும் விபத்துகள். அந்த பணியாளர்களுக்கு ஏற்படும், சரும, சுவாச மற்றும் பல உடல் நலக்கேடுகள். சுற்றுப்புற மாசு இப்படி நிறைய நெகடிவ் விஷயங்கள் பட்டாசு கூடாதுன்னு சொல்ல வைக்குது.

அளவோடு, பட்டாசு வெடிச்சு கொண்டாடலாமே. அதே போல் வேற நிறைய improved items எல்லா துறைகளிலும் வந்தது போல், environmentally more friendly வெடிகளை கண்டு பிடிக்கலாமே.

Gloria

என்னை பொறுத்த வரையில் அவசியமே இல்லை. குழந்தைகளுக்கு சந்தோசம் என்ற ஒரு விஷயம் உண்மை தான்.

ஆனால் அந்தக் குழந்தைகளை கொண்டு தான் சிவகாசியிலும் சீனாவிலும் பட்டாசு உற்பத்தி செயப்படுகிறது என்பதும் வேதனையான உண்மைதானே!

ஒரு நாள் சந்தோஷத்தை விட பாதுக்காப்பு முக்கியம்... எப்படியும் தீபாவளி என்றால் புத்தாடை, பலகாரம், குதூகலம் என்று இருக்கும் தானே? அது போதுமே... இல்லைனா இங்கே செய்வது போல அரசாங்கமே பொது இடத்தில் வான வேடிக்கை நடத்தலாமே...? அது பாதுகாப்பாகவும் இருக்கும்... பிள்ளைகளுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும்... இதுவே என் கருத்து.

​Sriramajayam @ Viswanathan

வெடிகளை வெடித்து ஓசோனை உருக்குலைய வைப்பதல்ல தீபாவளி. ஜாதி மதத்தை பொசுக்கி தேசம் நிமிர நல்வழியில் பாடுபடுவதே தீபாவளி.

பட்டாசு வெடிப்பதை நிறுத்தி, திங்கள் முகம் மலர இன்ப ஒளியேற்றிடுவோம். கல்லாமையை இல்லாமையாக்கி அறிவு ஒளியேற்றிடுவோம். எங்கும் பட்டினி சாவுகள் மறைந்திட ஏழையின் வாழ்வில் ஒளியேற்றிடுவோம். பணம் பொங்கி மனம் நிறைய உழைப்பின் மகத்துவ ஒளியேற்றிடுவோம். அனுபவம் வெற்றியின் ஓர் கண். அம்முதியோரின் அரவணைப்பு ஒளியேற்றிடுவோம். ஒற்றுமை ஓங்கிட பாசம் நிறைந்திட, நெஞ்சினில் தாயுள்ளம் ஒளியேற்றிடுவோம்.

​Girija Chandu

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பது - அவசியமற்றது ​
கண் முன்னே காசு கரி ஆகுதல். சப்தங்கள் வயது முடியாதவரை, வியாதியஸ்தர்களை உபத்ரவிக்கிறது. நம் கொண்டாட்டங்கள் மற்றவருக்கு திண்டாட்டம் ஆகக் கூடாது.
பட்டாசு வெடிக்காத, சப்தம் இல்லாத, சுத்தமான நாளாய் தீபாவளி இருந்தால் நன்று என மட்டுமே விரும்பிகின்றேன்.

​ chan

தீபாவளி சரவெடிகளால் பல ஆபத்துகள், சுற்றுப்புறம் மாசு பட்டாலும், இந்த பட்டாசு வெடிப்பதில் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் மகிழ்ச்சி அடைவது என்னவோ உண்மைதான்.

முடித்தவரை அதிகம் சத்தம் தரும் வெடிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் மிகவும் நல்லது.

பட்டாசு வெடிப்பதில் சில தீமைகள் இருந்தாலும்,,இது வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் use செய்வதாலும். பல மக்களுக்கு இது வேலை வாய்ப்பை அளிப்பதை கருத்தில் கொண்டு, அரசு சில தர கட்டுப்பாடு செய்து,சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத சில வெடிகள், மத்தாப்புகள் வெடிக்க அனுமதி தரலாம்.

மக்களும் பொறுப்பு உணர்ந்து யாருக்கும் ஆபத்து விளைவிக்காத வகையில் பட்டாசு வெடிக்கலாம். வெடித்து முடித்தபின் முடித்த வரை அவர்கள் வீட்டின் முன் இருக்கும் பட்டாசு குப்பைகளை சுத்தம் செய்தால் நல்லது. மற்றும் தீ விபத்து ஏற்படாமலும், ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி அறிந்து கொள்வது நலம்.

எழுதியவர் : (20-Oct-16, 6:32 pm)
பார்வை : 309

மேலே