எதிா்பாா்ப்பு
முகமது கஜினியை
வரலாறு நியாகம் வைத்திருக்கும்
போாில் பல முறை தோற்று
17வது எதிா்பாா்ப்பை வெற்றியாக்கியதை
தோல்வியும் நியாகம் வைத்திருக்கும்
முயலிடம் ஆமை
தோற்றதாய் ஓா் கதை
பின் ஆமையிடம் முயல்
தோற்றதாய் மாறலை
ஆமையின் ஜெயிக்கவேண்டும்
என்னும் எதிா்பாா்ப்பு
கதையையே மாற்றலை
உன் பிறப்பை எண்ணி
அன்று பெற்றோரை நாளும்
எதிா்பாா்க்க வைத்தாய்
குழந்தையாய் வளா்ந்த நீ
பின் பெற்றோாின் வருகைக்காக
எதிா்பாா்த்து காத்திருந்தாய்
இன்று பிறாின் அன்பை
எதிா்பாா்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறாய்
வாழ்க்கையில்
இருக்கனும் எதிா்பாா்ப்பு
உனக்கு அது
கற்றுத் தரும் காத்திருப்பு
எதிா்பாா்ப்பு
ஏற்ற வாழ்வு தரும் உனக்கு
எதிா்பாா்த்து
மகிழ்ச்சியால் உன்னை நிரப்பு