கிராமத்துப்பறவை

ஊரை விட்டுப் போறாளே,
ஊமத்தி கருத்தம்மா..
நெஞ்சில முள்ளத்தச்சிட்டு,
நேரத்தில போறாளே .....

வாக்கியா வரப்புகளும்,
அவ பேச்சக் கேட்பதெப்போ...
மந்தையில் அய்யனார் ஊமையா நிக்குறாரு...

அரும்பு மீசையிடம் , மனச தொலைச்சிட்டு ,
ஆத்தக் கடந்துப்புட்டு கண்ணீரில நீந்துறாளே..

ஜாதி,மத பேதமெல்லாம் இன்னும் இங்க போகலையே,
காதலுக்கு விடுதலை இன்னும் இங்க கிடைக்கலையே.!!

ஊரை விட்டுப் போறாளே,
ஊமத்தி கருத்தம்மா..
நெஞ்சில முள்ளத்தச்சிட்டு,
நேரத்தில போறாளே .....

எழுதியவர் : பாரதி பறவை (21-Oct-16, 11:39 am)
பார்வை : 80

மேலே