நலமோ எனநான் கேட்பேன், யாரோ என நீ கேட்பாய்
![](https://eluthu.com/images/loading.gif)
நலமோ எனநான் கேட்பேன், யாரோ என நீ கேட்பாய்
===============================================
கடைசியாக வாசித்துவிட்ட
உன் கவிதைகளுக்குப் பின்னால்
வேறெதுவும் வாசிக்கத் தோன்றவில்லை
எனப் பிதற்றுவாய்
காலியாகிவிட்ட எதிர்வீட்டு ஜன்னலில்
சிலந்திவலைக் கட்டிக்கிடப்பதை
கோலம் போட்டபடியே
அவள் கண்ணீர் கனத்து பார்த்துக் கொண்டிருந்தது
என்றுச் சொல்லி
அந்த கவிதையை முடித்துவிட்டாய்
மனமும் மாக்கோலமும்
இன்னும் அங்கேயேதான் இருக்கு
என்று திமிறுவாய்
அதிசயம்தான்
நான் அணைக்கவேண்டுமாய்
என் கைகளை
உன் பக்கம் எப்படி நீட்டினாலும்
ஏதோவொரு
அழகான விஷயம்போல
சட்டென்று அதற்குள் அடங்கிவிடுகிறாயே
கூடலுக்குப்பின்னால்
அப்போதுதான்
உதிர்ந்துவிழுந்த கோழி இறகுகளைப்போல
பூத்துவெடித்த
புதுப்பஞ்சு போல
அன்று விரிந்த கொள்முதல் மலரின்
இதழ்களைப்போல ஆம்,,
இந்த சூத்திரம் எப்படி என்று எனக்கும் சொல்லித் தா ம்ம்ம்ம் ,,,,
அலைகள் எத்தனை வந்தாலும்
என் கால்களை
நனைப்பதே இல்லைநான்
படிக்காத மூதாட்டி
அங்கே சொல்லிக் கடந்ததைப்போல
அமைதியாக
முந்திக் கொண்டுவரும் அலை
ஆணலையாமே
ஒரு குழந்தையிடம் சொல்லி
அங்கே போகவேண்டாம்
இன்னும் சிறிது நேரத்தில்
பெண்ணலை ஆக்ரோஷமாய் வந்து
ஆணலையையும்
அங்கே கால் நனைக்கும்
அனைவரையும் அள்ளிச்சென்றிடும் என்கிறாள்
ஒருநாள் அலையென வருவேன்
என்று சொல்லிவிட்டு
மறைந்துபோன
இடத்திலேயே காத்திருக்கிறேன்
உன் ஆக்ரோஷம் என்னை
அள்ளிச் சென்றிடாதா என்று
இது காவியமா என்று தெரியவில்லை
உச்சக்கட்ட ஆசையின் புலம்பலா என்றும் தெரியவில்லை
தோன்றுகிறது மீட்டுகிறேன்
கிரகங்களை சுமந்திருக்கும் பேரண்டத்தை
ஏதோ க்ஷணம்
வெள்ளியோடை தடவிப் போவதைப்போல
குளிர்ச்சித் தாளாத
மனசுக்குள்
அற்பம் பிரிந்திருந்து
ரேகை ஓடவிடுகிறாயே
இனி அடுத்த நான்கு ராத்திரி களுக்காவது
உனக்கு மோக்ஷமில்லாத விஷமந்தான் போல
உன்னிடம்
எதையெதையோ பேசிவிட்டு
ஏதும் செய்யாமல்
திரும்பிப் போகிறவனைப் பற்றி
இனி விடிய விடிய பேசிக்கொண்டிருப்பாய்
படுக்கப் பாய்ப்போடுவதே
பைத்தியக்காரத் தனம்
முற்றிய பின்னால்தானே
இந்த முறையாவது
நான் வாங்கிக் கொடுத்த ஆடைகளையும்
பரிசுப் பொருட்களையும்
அடுத்து நான் வரும்வரை
உபயோகிக்காமல் அப்படியே வைத்திரு
புத்தாடையில்
உன்னைக் காணும் பொலிவு
நீ அனுப்பும் புகைப்படத்தில் இல்லையடி
இந்த வாழ்க்கை
உனக்கு சலித்துவிடாமல் இருக்கத்தான்
வருடம் ஒருமுறை வருகிறேன்
அடிக்கடி
என் விரல்கள் எட்டாத
மேற் முதுகில்
அரித்துவிடும் வியர்க்குருகளின் மேலே
கோபப்படும் உன் நகங்களின்
""வன்முறை உணருகிறேன்"" கனவு வருது ம்ம்ம்
உனக்கு நினைவிருக்கா
நாம் சண்டையிட்ட
எத்தனையோ நாட்கள்
பத்துமுழம் மல்லிகைப்பூவோடு
உன் அறைக் கதவோரம் சாய்ந்து
மெளனமாக நிற்பேன்
அன்றெல்லாம் கூட
உன் பார்வை முட்கள்
உனக்கு ரோஜாதான் பிடிக்குமென்று
என்னிடம் சொல்லுவதாக
நினைத்துவிட்டு
அவ்விடமிருந்து விடைபெற்று நகர்வேன்
எப்போதும் ஜன்னலில் பூத்துத் ததும்பும்
உன் காத்திருப்புகளிடம்
என் நினைவுகள் கையசைத்துப் போக
தவறியது இல்லை
பாதைகளில் தாழிட்ட
முன் பனிக்காலங்களைப்போல
கார் மஞ்சுகளைப்போல
மழைப்பிறக்கும் முன்
ஆதித்தட்டான்களின்,
புற்றீசல்களின் வரவினைப்போல
"பூக்காரன் கவிதைகள்"