என் தோழமையே

அன்புள்ள என் உயிரே !!!


உன்னோடு நட்பாகி
உன்னோடு உறவாடி
அனுதினமும் மகிழ்ந்து
வாழ்வெல்லாம் தோழனே நீ மட்டும் போதும் என்றெண்ணி வாழ்ந்தேன் !!!




எமை விட்டு நீ விலகுவாய்
என கனவிலும் காணாத நான்...

இன்று உன் பிரிவை தாங்காமல்
இதயம் வாடுகிறேன்!!!


உன்னை என் உயிரென எண்ணி வாழும் இந்த உயிர்
உன் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறது ...


எனக்கு மட்டும் என்று நான் எண்ணாமல் இருந்திருந்தால்
இன்று ...

நானும் எதோ ஒரு பாதையில் எங்கோ போயிருப்பேன் !!!

தோழமையே ....
காத்திருப்பேன் ...
உன் வருகைக்காக உயிர் உள்ள கடைசி நொடி வரை...!!!

எழுதியவர் : preethitamizhini (23-Oct-16, 7:08 pm)
Tanglish : en tholamaiye
பார்வை : 575

மேலே