காதலை தேடி-27
காதலை தேடி-27
எங்கிருந்தாலும் உன்
மூச்சு காற்றை உண்டே
உயிர் வளர்க்கிறேன்....
உன் மூச்சு காற்றை
தேடி தேடியே
காதலையும் வளர்க்கிறேன்....
மறந்துவிடாதே என் சகி
நீ உன்னவள் இல்லை என்னவள்
என்பதை.....
" என்ன சாரதி இப்போ சந்தோஷமா? இன்னைக்கு நீங்க ஊருக்கு போக போறிங்க, இத்தனை நாள் நீங்க மிஸ் பண்ண உங்க குடும்பத்தையும் உங்க மிஸ்ஸசையும் பார்க்க போறிங்க, எப்படி பீல் பண்றிங்க"
"ஆமா டாக்டர், உண்மையாவே இன்னைக்கு தான் என் லைஃப்லயே சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ சந்தோசம் உள்ளுக்குள்ள நிரம்பி வழியுது, என் சகிய நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த நாளை விட இன்னைக்கு இத்தனை நாள் பிரிவுக்கு பின்னாடி அவளை பாக்க போறேன்ற நினைப்பே என்ன அவ்ளோ சந்தோஷப்பட வைக்குது டாக்டர்"
"ம்ம்ம், உங்க பீலிங் புரியுது சாரதி, உங்க சந்தோஷமான முகமே எல்லாத்தையும் சொல்லுது, எப்படியோ இந்த ஒரு மாசம் நீங்க பட்ட எல்லா அவஸ்தைகளுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்க போகுது"
"எஸ் டாக்டர், நான் உங்களுக்கு தான் ரொம்ப பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கணும், நீங்க இல்லனா இந்த சந்தோசம் எனக்கு கிடைச்சிருக்குமானே தெரியல, நீங்க, திலீப், இங்க ஒர்க் பண்ற ஒவ்வொருத்தரும் எனக்கு குடுத்த தைரியம், பாசம் தான் இன்னைக்கு என்ன முழுமையா குணமாக வச்சிருக்கு, என்னோட எதிர்காலத்தை திருப்பி குடுத்துருக்கு"
"சாரதி நீங்க ரொம்ப நல்லவர், பர்ஸ்ட் ஒரு பேஷண்டா தான் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுத்தேன், அதுக்கப்புறம் இங்க பிறந்த ஒரு ஏழை குழந்தைக்கு உடனடியா ஆபரேஷன் பண்ணனும், ஆனா அதுக்கு அவங்க கைல பணமில்லன்ற ஒரு சூழ்நிலை வந்தப்போ எல்லாரும் பரிதாபப்பட்டாங்க, ஆனா நீங்க ஒரு பேஷண்டா இருந்தாலும் இந்த விஷயம் தெரிஞ்சதும் உங்க கம்பெனில பேசி உங்க பணத்தை ஹாஸ்பிடல் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பெர் பண்ற வர படுத்த படியே எல்லா உதவியும் செஞ்சீங்க, இந்த மனசு யாருக்கு வரும், தனக்கு ஒரு கஷ்டம், எழுந்து நடமாட கூட முடியாத சூழ்நிலை, குடும்பத்துக்கு கூட தெரியப்படுத்த முடியாம தனிமைல தனியா நின்னு சமாளிக்கணும்ன்ற இவ்ளோ பெரிய கஷ்டத்துல யாரா இருந்தாலும் தனக்கென்ன வந்ததுன்னு சுயநலமா தான் இருந்துருப்பாங்க, ஆனா நீங்க உதவி செய்ய முன்வந்திங்க, அது எவ்ளோ பெரிய விஷயம்.... அதுக்கப்புறமா உங்களை யாரோ ஒரு பேஷண்டா என்னால பார்க்க முடியல, என் குடும்பத்துல ஒருதரா தான் தெரிஞ்சிங்க சாரதி”
" டாக்டர் நீங்களும் தான அவங்களுக்கு உதவி செஞ்சீங்க, நான் செஞ்சத மட்டும் பெருசா பேசறீங்களே"
"நான் செஞ்சது வழக்கமான உதவி தான் சாரதி, ஆனா நீங்க செஞ்சது அப்படியில்ல, உங்களுக்கே கஷ்டமான சூழ்நிலைனு இருக்கும்போது அடுத்தவங்க கஷ்டத்தை உணர்ந்து உதவறது சாதாரணமானது இல்ல"
"போதும் டாக்டர், நீங்க பாராட்றதெல்லாம் அதிகப்படி தான், இத விட்ருவோம்...நாம என் விஷயத்துக்கு வரலாமே, நான் இன்னைக்கு ஈவ்னிங்கே ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன், டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் எதாவது இருக்கா, இருந்தா இப்போவே அத முடிச்சிட்டு ஈவ்னிங் கிளம்பும்போது எந்த டென்ஷனும் இல்லாம ஸ்மூத்தா கிளம்பலாம் "
"திலீப் ஆல்ரெடி பில் கட்டிட்டாரு, உங்களோட மெடிஸன், அகைன் எதாவது பெயின் வந்தா என்ன பண்ணனும்னு சில டீடெயில்ஸ் உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கு, அந்த இன்ஸ்ட்ரக்ஷன்லாம் நான் நீங்க கிளம்பரத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன், வேற எந்த பார்மாலிட்டியும் இல்ல, நீங்க எந்த டென்ஷனும் இல்லாம ஹேப்பியா கிளம்பலாம்"
"தேங்க்ஸ் டாக்டர்"
"ம்ம், ஓகே சாரதி, நான் உங்களை அப்புறமா வந்து பாக்கறேன்"
எப்படிப்பட்ட சந்தோஷமான நிமிஷம், சாரதி அவளோட சகிய பாக்க போறான்....இந்த சந்தோஷத்தை நிச்சயமா என்னோட சகியோட நான் கொண்டாடி யே ஆகணும்...
"ஹலோ யார் பேசறது?"
"ஹலோ, நான் சாரதி பேசறேன்"
"சாரதியா?? நான் அம்மா பேசறேன்பா, எப்படி இருக்க? வேலைலாம் முடிஞ்சதா? ஏன்பா இப்படி ஒரு மாசமா அங்கயே இருந்துட்ட, என்ன தான் வேலையா இருந்தாலும் இங்க ஒரு தடவ வந்துட்டு போயிருக்க கூடாதா"
"ஹையோ அம்மா, எப்போ போன் பண்ணாலும் இந்த டையலாக்க சொல்லாம இருக்க மாட்டீங்களே, அம்மா நான் சீக்கிரம் வந்துடுவேன், வேலைலாம் முடியற நிலைல தான் இருக்கு, அடுத்த முறை கால் பண்ண மாட்டேன், நேர்லயே வந்து நிப்பேன், ஆனா அப்பவும் இதே டையலாக்கே சொல்ல கூடாது, ப்ராமிஸ் பண்ணுங்க"
"அட போடா போக்கிரி பயலே, இங்க உன்ன பாக்காம நான் எப்டிலாம் தவிச்சிட்டு இருக்கேன், நீ என்னனா என் தவிப்பை எல்லாம் டைலாக்குனு நக்கல் பண்ற"
"அம்மா எனக்கு மட்டும் தவிப்பு இல்லையா, உங்க கஷ்டம் புரியுதும்மா,அதுக்கு தான் சீக்கிரமே நேர்ல வர போறேனே, அப்போ உங்க பாசத்தெல்லாம் ஒட்டு மொத்தமா காட்டுங்க, நான் வாங்கிக்கிறேன், இப்போ அப்பாகிட்ட போன் குடுங்க"
"என்ன வளர்ந்தாலும் உன் குறும்புத்தனம் குறையல, சரி இருப்பா அப்பா பக்கத்துல தான் இருக்காரு, கொடுக்கறேன்"
"தம்பி சாரதி, எப்படிப்பா இருக்க, அங்க எல்லாம் வசதியா இருக்கா, வேலைல ஒன்னும் பிரச்சனை இல்லையே, அப்டி ஏதாவதுனா என்கிட்டே மறைக்காம சொல்லுப்பா, பாத்துக்கலாம்....வேலைல கவனமா இருக்க மாதிரி உன்னையும் கவனமா பாத்துக்கோ, சீக்கிரமா வர சொல்லி உன் அம்மா புலம்பறதால எதையும் அவசரமா செஞ்சி கஷ்டப்படாதப்பா, நீ செய்ற வேலைய நிதானத்தோடு செய்ப்பா"
"இது தான்ப்பா நீங்க, உங்ககிட்ட பேசினாலே நிதானமும் பொறுமையும் ஒட்டிக்கும், சரிப்பா சகி பக்கத்துல இருக்காளாப்பா"
"இதுக்கு தானா இந்த ஐஸ், எனக்கு அப்பவே சந்தேகம்"
"அப்பா நீங்க வேற, நான் நிஜமா தான் உங்களை பாராட்டினேன்"
"சரிப்பா, சரி...இருப்பா சகி கிட்ட கொடுக்கறேன்"
"சகி, இந்தாம்மா… உங்கிட்ட பேசணுமாம்"
"என்கிட்டயா?" என் சகி கொஞ்சம் திணறி, சந்தோஷப்பட்டு பதட்டமடைந்து குழப்பமடைந்து ரிசீவரை வாங்கியது எனக்கு புரிந்தது....
பின் என்ன இதனை நாளாய், அவளிடம் பேசாமல், பேசினாலும் வார்த்தைகளை புல்லட்டுகளாக பொரிந்து தள்ளியவன் இன்று தானாய் பேச நினைக்கிறான் என்பதில் அவள் திணறுகிறாள் என்றால் அதில் பெரிய திகைப்பு ஒன்றுமில்லை...
"ஹலோ"
இத்தனை நாளும் அவளிடமிருந்து உண்மையை மறைப்பதிலும், கோபமாய் நடிப்பதிலும் என் கவனம் இருக்க வேற ஒன்றும் என் உள்ளதை ஊடுருவி செல்லவில்லை...
ஆனால் இன்று அவளின் ஒற்றை வார்த்தை சில்லென்று என் இதயத்தின் ஆணிவேர் வரை ஊடுருவி காதல் பாடம் படிக்க என் மனம் ரெக்கை விரித்துகொண்டு கானல் வானில் மிதக்க அவள் குரலின் தித்திப்பில் என் நாவு எச்சிலோடு ஊற மெய்மறந்து உறைந்து கிடந்தேன், அந்த சில வினாடிகள்...
"ஹலோ"
அவளின் அழுந்திய குரல் என்னை மீட்டெடுத்தது...
"ம்ம்"
"சொல்லுங்க, நான் சகி தான் பேசறேன்"
"சகி, எப்படி இருக்க? ஒழுங்கா சாப்பிடறியா, உன்ன பார்க்காம ரொம்ப கஷ்டமா இருக்கு, வேலை அதிகமா இருந்ததால என்னால எதுவும் செய்ய முடியல, நான் சீக்கிரமா வந்துடறேன், மீதியை அங்க வந்து நேரா சொல்றேன் சகி, அப்புறம் முக்கியமான ஒன்னு"
"என்ன...... என்னங்க"
"ஐ லவ் யு"
அந்த ஒரு வினாடி அவளுக்கும் எனக்கும் நடுவில் காதல் திரையொன்று சூழ எங்களை காற்று கூட பிரிக்க முடியா ஓர் உணர்வு உள்ளுக்குள் இடதும் வலதுமாக ஆட்டிப்படைக்க அவளின் மூச்சு காற்றின் சூடும், ஏறி இறங்கிய அவளின் பதட்டமும், சிலிர்ப்பும் என் கண்முன்னே அவள் நிற்பதை போல் ஒரு காணலை நிகழ்த்தி காட்டியது.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
