விதிமுறையிலா விளையாட்டு

விதிவிதியெனக் கூறிடுவார்
விதிகளில்லா வாழ்க்கையை !
விதிமுறையிலா விளையாட்டு
விதிகளுடனே தலைப்பானது இங்கே !
விதிமுறையெனக் கடைபிடிப்பர்
விதிகளையும் வகுத்திடுபவர்கள் !
விதிகளென்பதும் வழிமுறைதான்
விதிகளுக்குள் எனபதும் நடைமுறை !
விதிகளுடன் கூடிய விளையாட்டும்
விதிகளை வகுத்திடும் முறையும்
விதிக்கும் விதிகளின் தன்மையும்
விதிமீறல் கூடாதெனக் கூறுவதும்
விதியெனக் கொள்வதே விதியானது !
விதிமுறைகள் அறிந்தும் மீறுவது
விதிகளறியா மடமை என்பதாலா
விதிமீறல் தவறில்லை என்பதாலா
விதிகள் முறையற்றது என்பதாலா
விதிகளே தேவையற்றது என்பதாலா .!
விதிவிதியென கதறுவது அறிவீனம்
விதிமுறைகளை மீறுவது பலவீனம்
விதிப்படி எனபதும் பகுத்தறிவின்மை
விதிகளென்பது வகுப்பவரின் கடமை
விதிகளை கருத்துரைப்பதும் உரிமை !
விதிப்படிதான் வாழ்க்கை என்போரும்
விதிமுறை தேவையென ஏற்போரும்
விதிகளை என்றும் கடைபிடிப்பார் !
விதிமுறை இல்லா விளையாட்டும்
விதிகளுக்குள் வாராத முடிவுகளும்
விதிகளை என்றும் எதிர்ப்பவர்களே !
விதியையும் விதிகளையும் இணைத்தே
விதிகளுக்குள் வந்திட்ட வரிகளிவை !
விதியென ஒப்புதல் அளித்தாலும்
விதிமீறல் என்றே புறக்கணித்தாலும்
விதிமுறையிலா விளையாட்டே என்று
விதிமீறா கவிதை என்றே கூறிடுவேன் ....!
பழனி குமார்