என் ஆதங்கம்
என் ஆதங்கம்
""""""""""""""""
நீ போகும் பாதையில்
உமிழ்நீரை உமிழ்கிறாய்,
உனை போல
மனிதன் தான் தினம்
சுத்தம் செய்கிறான்,
அவனுக்கு புண்ணியம்,
உனகன்றோ அப்பாவம்..
உனக்கான உணவை
பல நேரம் வீணாக்குகிறாய்,
உனை போல மனிதன் தான்
பல நாட்கள் கடின உழைப்பில்
அவ்வுணவை படைக்கின்றான்,
அவனுக்கு புண்ணியம்,
உனகன்றோ அப்பாவம்....
தினம் மதுகுடித்து உன்
துணையை நீ
கொடுமை படுத்த,
உன் குடும்பம் காக்க அவள்
அனைத்தும் பொறுத்தாள்,
அவளுக்கு புண்ணியம்,
உனகன்றோ பெண்பாவம்...
கருவில் சுமந்த உன்
தாயை நீ சுமக்க
மறந்து, உன் இல்லம்
மறுத்து முதியோர் இல்லம்
சேர்கின்றாய், உன்
வாழ்க்கையே அவள் செய்த
புண்ணியம், ஆனால்
உனகன்றோ அப்பாவம்..
மனோஜ்