முரண்பாட்டு முடிச்சுகள்

இறுதிவரை தன்கூட வாழும் கரைக்கு,
அலைகடல் ஒவ்வொரு வினாடியும்
அபிஷேகம் செய்கிறது......தெய்வமாக பூஜித்து!!
இயற்கை நமக்கு நிறைய போதிக்கிறது....காலங்காலமாக!!
ஆனால்,
நகர ஜோடிகளின் கடற்கரையில் நனைந்த ஆடை ,
அவர்தம் கோபத்தீயில் காய்கிறது......நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு!!
முரண்பாடான மனைவிகளால்
ஆண்கள் வடிக்கும் கண்ணீரித்துளியில்
குருதியும் கலந்திருக்கிறது......!
முற்றுப்புள்ளியின் பயணம் தொடர்ச்சியாய்
அமைகிறது அதன் பொருளில்!!