விடியா இரவுகள்
துளிர்த்து மரமாய் வளருமென
விதைக்கப்பட்ட காதல்
அன்பு பொய்த்துப் போனதால்
வளரும் முன்னே
மாய்ந்துவிட்டது..
விடியுமென காத்திருந்த இரவுகள்
காதல் சூரியன் களவாடப்பட
இருளே தொடர்கதையானது
பொருளே இல்லாத வாழ்வில்
வரும் இரவுகள் அனைத்தும் விடியா இரவுகளே...