என் காதல் நிஜம்

27.10.2015 திகதியில் நான் எழுதிய கவிதை இன்றுடன் ஒரு வருடம.....!

♡♡என் காதல் நிஜம்♡♡

உன் விழிகள் எனை நோக்க
என் விழிகள் உனை நோக்க
இமைகள் எனும் கதவுகள் மூடாது
அன்றொருநாள் கண்ட அதே முகம்
காதல் போர்வை நம்மை மறைக்க
திளைத்தோம் காதல் மயக்கத்தில்...!

ஆனால் இன்று என் எதிரே
வேறொருத்தியை
கரம் பிடித்து நிற்பதைக் கண்டு
வார்த்தைகள் வெளி வராமல்
நிற்கின்றேன் மௌனமாய்....
என் காதல் நிஜமென்பதால்
உன் காதலோ...??????

எழுதியவர் : சி.பிருந்தா (27-Oct-16, 7:36 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : en kaadhal nijam
பார்வை : 544

மேலே