இதயவலிகளோடு உறங்காமல் யோசிக்கிறேனடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே...
உன் இறுதி வார்த்தைகளின்
வலிகள் என்னுள்...
வாழ்வின் எல்லைவரை கொண்டு
செல்லுமென்று நான் நினைக்கவில்லையடி...
நான் உன்னை வெறுக்கும்வரை
வலிகள் நிரந்தரமாடி...
என் வாழ்வில் உன் நினைவும்
இறுதி வார்த்தைகளும்...
முள்ளாய் குத்துதடி
என் இதயத்தில்...
இதயவலிகளோடு உறங்காமல்
யோசிக்கிறேனடி நான்...
என் வாழ்க்கையின் நந்தவனமும்
பாலைவனமும் நீதானடி...
நான் இல்லையென்றால் என்ன உனக்கு
நல்ல பெண் கிடைப்பாள் என்கிறாய்...
எனக்கு ஆயிரம் பெண்கள்கூட
கிடைக்கலாம்...
எனக்கு இன்னொரு தாய்
உன்னைப்போல் கிடைப்பாளா...
சொல்லிவிட்டு செல்லடி
உன் பதிலை எனக்கு...
உன்னை சுமக்கும் என் இதயம்
ஏங்குதடி உன் பிரிவில்.....