இருப்பதெல்லாம் வாழ்வதாகுமா

*************************
பொது வாழ்க்கை
*************************
*
வாழ்க்கைக்கு
தேவையானதெல்லாம்
கிடைக்காததால் தானே
இன்று வாட்டம்?

தேவைகளெல்லாம்
ரேஷனிலும் இலவசத்திலும்
கிடைத்து விடும் என்றே நம்பும்
ஏழைகளல்ல நாங்கள்!

அறிவையும் திறமையையும்
உழைப்பையும் ஆற்றலையும்
அள்ளி இறைத்து கடமையை ஆற்றும்
போராளிகள் நாங்கள்!

எஜமானனே ஏழையாகிப்போனான் என்பதை
எங்கள் சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

எங்கள் உழைப்பை வாங்கிக்கொண்டு உயரமுடியவில்லை
என்றெல்லாம் கதை சொன்னால் இங்கே நடக்காது!

ஏணிகளாய் இருந்தே நாங்கள் இளைத்து விட்டோம்,
எங்களால் உங்களுக்கு ஏற்றமில்லை என்பதை ஏற்க முடியாது.
*
**********************
தனி வாழ்க்கை
**********************
*
எப்படி
இருக்கிறாய்?

எளிதாகக்
கேட்டுவிட்டாய்

இருப்பதெல்லாம்
வாழ்வதாகுமா?
*

எழுதியவர் : செல்வமணி (28-Oct-16, 12:02 am)
பார்வை : 274

மேலே