கடலாய் எரிகிறது காதல்

நீ .......
பிரிந்து நின்ற கணத்தில்
ஒற்றைச் சொல்லற்று
திகைத்து நிற்கிறது காலம்.

ஆகாயத்தில்
வெளியற்ற வெளியில்
மிதக்கிறது
என் பிறழ்ந்த பரிமாணம்.

அன்பின் முத்தங்கள்
ஏதுமற்று ...
இருளின் தத்தளிப்பில்
தனிமையில் விசும்புகிறது
உடல் கூடு.

துயிலற்ற மௌனமோ...
நின்ற நிலவில்
இருண்மை பதிக்கிறது.

மிளிர்ந்தூறும் பரிகாசங்கள்...
ஊசிக் கண்களால்
குழி விதைக்கிறது
என் விழியின் வழியெங்கும்.

இற்று விழுந்த அலையாய்...
எனக்குள்
சிறகு தளர்ந்து விழுகிறது
நம் பிரியத்தின் பறவை.

எல்லாம் மீறி,,,

கடலாய் எரிகிறது
என் காதல்.

எழுதியவர் : rameshalam (28-Oct-16, 9:11 am)
பார்வை : 80

மேலே