வேண்டுமென கேட்கிறேன்

என்னவளே...

தனிமை என்னை வதைக்குதே....
தாகமாய் வந்து வாட்டுதே....
தவித்திடும் உயிரை ஆற்றவே...
தண்ணீராய் உனையே தான் கேட்குதே...

இரவு என்னை வதைக்குதே...
இடமெலாம் உடலினில் வாட்டுதே...
இறந்திடும் உயிரைக்காப் பாற்றவே...
இனிய பகலாய் உனையே தான் கேட்குதே...

தென்றல் என்னை வதைக்குதே... நீ
தேடி தொட்ட இடமெலாம் வாட்டுதே...
தொலைத்திடும் நினைவை ஆற்றவே... என்முன்
தோன்றிட உனையே தான் கேட்குதே...

கனவு என்னை வதைக்குதே...
கண் மூடினாலே வந்து வாட்டுதே...
கண்ணீர் உதிர்த்திடும் அதைக்காப் பாற்றவே...
கண்முன்னால் உனையே தான் கேட்குதே...

நிலவு என்னை வதைக்குதே...
நினைவில் உன் முகமாய் மாறி வாட்டுதே... நிராசை
நிறைத்திடும் நினைவை தேற்றவே...
நிஜமாய் உனையே தான் கேட்குதே...

என் நெஞ்சம் என்னை வதைக்குதே...
என்றும் உனை எண்ணியே வாட்டுதே...
எரிந்திடும் என்னைக்காப் பாற்றவே...
எதிரினில் உனையே தான் கேட்குதே...

காதலும் என்னை வதைக்குதே...
காலமெலாம் உன் தொலைவால் வாட்டுதே...
காய்ந்திடும் நெஞ்சைத் தேற்றவே...
காருண்யமாய் உனையே தான் கேட்குதே...

எழுதியவர் : தாஜூ.. (28-Oct-16, 2:15 am)
Tanglish : vendumena kedkiren
பார்வை : 145

மேலே