மறைக்காதா

அடியே..

காரிருள் மறைத்த வானும்,
பாலையை மறைத்த இருளும்,
நிலவை மறைத்த மேகமும்,
இரவிருளை மறைத்த விளக்கொளியும்,
கணத்தில் இருள் மறைத்த மின்னலும்,
இரவை மூடி மறைத்த பகலும்,
என் கண்ணீர் மறைத்த மழையும்,

ஏனடி மறைக்கவில்லை ஒரு நொடியேனும்?
என்னுள் உன் நினைவை.?

எழுதியவர் : தாஜூ.. (28-Oct-16, 2:28 am)
பார்வை : 205

மேலே