தித்திக்கும் தீபாவளி

தீப ஒளியில் தீபாவளி
இன்னும் அழகாய்
ஜொலித்தது..
இனிப்பு வகைகள்
திண்பண்டங்கள்
இன்னும் தீபாவளியை
தித்திக்க வைத்து..
வண்ண வண்ண புத்தம்
புது கண் கவரும் ஆடைகள்
இன்னும் தீபாவளிக்கு
வண்ணம் சேர்த்தன..
மத்தாப்புகள் பூந்தொட்டிகள்
சங்கு சக்கரங்கள் சரவெடிகள்
இன்னும் தீபாவளியை
அமர்க்களபடுத்தியது..
நண்பர்களோடு உறவினர்களோடு
குடும்பத்தினரோடு விருந்தினர்களோடு குழந்தைகளோடு இன்னும்
தீபாவளியை சிறப்பாக கொண்டாடினோம்...
வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க
மக்கள் மனங்களில் இருள் அழிந்து
புது வெளிச்சம் பிறக்க
தீபாவளியை இன் முகத்தோடு
வரவேற்று கொண்டாடிடுவோம்..
அனைவருக்கும் இன்பம் பொங்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
கவியுடன்
கா. அம்பிகா