தீபாவளி

வருடத்தின் ஒரு நாள்
பக்குவமாய் வெடி போடு
துன்பமனைத்தையும்
மளமளவென அதில் போடு
நீ சுமந்து
கொண்டிருப்பாய் பல பாரம்
அதையெல்லாம் மறந்து
இன்றுண்ணு பலகாரம்
உடுத்த புது உடை
இல்லை என்ற கவலை வேண்டாம்
உள்ளம் புத்துணா்ச்சியாக இருந்தால்
புதுமையை தேடி அழைய வேண்டாம்
நீ பட்டாசு வெடிக்கும்
சத்தம் ஊரையே எழுப்பனும்
துவண்டு கிடைக்கும்
மனிதனையும் அது எழுப்பனும்
தூங்கி எழுந்ததும் தலைக்கு
எண்ணெய் தேய்ச்சிக் குளி
இன்னைக்கு பூரா
நீ ஜாலியா கழி
இருள் ஒழிந்து ஒளி ஒளிர வாழ்த்துக்கள்
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்