இறுதி நாழிகை
இந்த வாழ்க்கை
பெரியது தான்
தெரியாமல்
பகை வளர்த்து
வாழ்வதால்
தான் சீக்கிரமே
முடித்துக்கொள்கிறோம்......!!
கடவுளை விடவும்
காசு
பெரிதாய்
போச்சு.....காலை
மாலை
அட கனவிலும்
காசு தான்
காட்சி என்றாகிப்
போச்சு......!!
சுற்றிவந்த
சொந்தமெல்லாம்
பற்றின்றிப்
போச்சு.....
சுகம் கேட்க
சோகம் பகிர
ஆளில்லா தேசத்தில்
அநாதை
என்று நானும்
ஆனேன்.....!!!
வலிகளை
உள்வாங்கிக்கொண்டு
விழிகளை
மூடி தூங்கிய
காலங்கள்
தூரத்தில்
போயாச்சு......துயரமே
மீதமென
மனம் வெந்து
ரொம்ப
நாளாச்சு......!!!
வேதனையின்
உச்சம்.....
இதய துடிப்பில்
அச்சம்......
இரண்டுமே
சேர்ந்து
இறுதி நாழிகை
என்று
ஆகிடுமோ என்கிற
ஐயம்......!!!???