முத்தத்துக்கு ஏது முற்றும் புள்ளி
முத்தத்துக்கு ஏது
முற்றும் புள்ளி!
******÷÷÷÷÷÷÷÷*******
காதல் மேலெழ கனிந்தது
கவிதை வரிகள் முத்தம்
கண்டு களித்தார் நண்பர்
கனிவான் முகமத் சர்பான்!
களிப்பை காற்று கவரவிடாத
கனவான் முகமத் சர்பான்
கனி சாறாய் பருகி
கருத்தும் வழங்கினார் இனிக்க!
காதலெனும் பந்தியில்
உணர்வுகளின் விருந்து
முத்தங்கள் தானே! விடயம்
வினா என தோணிக்க
விடை ஒன்று பிறந்தது
தொந்தி நிறைந்தால் முடிந்தது
பந்தியில் விருந்து .
முத்தத்துக்கு ஏது அப்பா
முற்றும் புள்ளி!
இதழும் இதழும் இணைய
இதயச் சுவர்க்கம் திறக்க
மீண்டும் மீண்டும் கவ்வும்
மீளா சுவர்க்கம் அணைக்கும்!
வானவரும் விரும்பும் அமுதம்
வாங்க வாங்கக் கொடுக்க
கொடுக்கக் கொடுக்க வாங்கும்
' கொல்லிடம் ' விஞ்சும் மனமே!