நீயும் நானும்
நீயும் நானும்
முழுவானம் நீ என்றால்
அதில் சிறைப்பட்ட மேகம் நான்!
கடல் நீ என்றால்
அதில் தவழும் அலை நான்!
பூமி நீ என்றால்
அதில் அடைப்பட்ட வைரம் நான்!
மலர் நீ என்றால்
அதில் சுகமான வாசம் நான்!
காற்று நீ என்றால்
அதில் இதமான தென்றல் நான்!
உயிர் நீ என்றால்
அதில் உறைபவள் நான்!!!