ஜன்னலோரம்

நானொரு கவிஞனாம்!
என் ஜன்னலிலும்
வாசலிலும் இரவில்
குடிபுகும் நிலவுகூறியது!

ஏனென்றேன்? நீ
வீண்னென்றது நிலவு;
வார்த்தைகளில் வலை செய்து
கண்களால் கொலை செய்யும்
அவளுக்கு வீசாமல்;

வண்ணவண்ண நட்சத்திரத்துடன்
வாய்பிளக்க விளையாடும்
எனக்கு வலை வீசுகிறாய்;

உன் ஜன்னலோரம்
பூக்கும் பூந்தோட்டவாசம்
அவள் கூந்தல் வீசும்
வாசத்திற் கீடாகுமா?

காகிதத்தில் எழுதும்
உன் வார்த்தைகள்
அவள் வாய்விட்ட
வார்த்தைக் கீடாகுமா?

வெள்ளை நிலாயென்னை
வெறுப்பேற்றி சொன்னது!

எழுதியவர் : சங்கேஷ் (29-Oct-16, 11:02 am)
Tanglish : jannaloram
பார்வை : 124

மேலே