வெள்ள நீரு
மனித நேயம்
மண்ணுல பொறந்துச்சு
மழை நீருலதான்
மீண்டும் மலர்ந்துச்சு
வெள்ளத்துல மிதக்கும்போது
வீடுவாசல் இழக்கும்போது
பட்டினியில் துடிக்கும்போது
பாதிஉசுரு போகும்போது ( மனித )
சாதிமதம் மறஞ்சிபோச்சு
சண்டை சச்சரவு கொறஞ்சிபோச்சு
ஏறி குளம் ஒடஞ்சதால
ஏற்ற தாழ்வு மறஞ்சிபோச்சு
பணமிருந்தும் பசியை
போக்க முடியில
பாழும் வயிற்றுக்குத்தான்
சோறுதண்ணி கிடைக்கல (மனித)
குடிசையில் இருப்பவனோ
கொட்டும் மழையில் மிதக்குறான்
அடுக்கு மாடியில் இருப்பவனோ
அவனை பார்த்து சிரிக்கிறான்
காருபங்களா வசதியைத்தான்
வெள்ள நீரு பாக்கல
உசுர புடிச்சு ஓடுநீயே
ஒரு சாமி வந்து தடுக்கலை (மனித)