தீபஒளி வாழ்த்துக்கள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
புத்துணர்வும் புறமுகமும்
புத்தாடை பொலிவினிலே
பட்டாசை கொளுத்திவிட்டு
பண்டிகையை முடித்துவிடும்
பதிவான நடைமுறையில்
உண்மையெனும் தீபாவளி
உள்ளத்தில் என்னதென
உனதருகில் இருப்போரின்
வறியோரின் பசிதீர்க்கும்
ஒருநாளாய் நினைத்துப்பார்
உன்னுதவி அகல்விளக்காய்
ஒருபோதும் மறையாமல்
அவர்வாழ்வில் பதிவாகும்
அழியாத நினைவாகும்
அன்பன்றோ தீபாவளி..!
அவர்,
உன்வீட்டு வேலையாளாய்
உன்தோட்ட காவலனாய்
உயிர்காக்கும் நண்பனாய்
துப்புறவின் தோழனாய்
துயரத்தில் விவசாயனாய்
எவராகவும் இருக்கலாம்
எமனாகவும் இருக்கலாம்
அத்தனையும் நாம்மறந்து
அறுசுவையாம் விருந்துக்கு
தலைவாழை விரித்துவிட்டால்
தருமனென்றும் நீயன்றோ..!
தலைகாக்கும் தமிழன்றோ..
மனிதத்தின் மெய்யன்பை
மறவாத உன்னுணர்வேதான்
மண்ணாளும் தீபாவளி –
நம்மில்-
மறையாத தீபாவளி...!
பகையில்லா தீபாவளி - நம்
பாசத்தில் தீபாவளி
ஒற்றுமையின் தீபாவளி -என்றும்
ஒளியான தீபாவளி…!