மீண்டு வா மகளே மீண்டு வா
மீண்டு வா மகளே மீண்டு வா ,
போராட்டம் உனக்கு புதிது இல்லை
மீண்டு வா மகளே மீண்டும் வா ............
காலத்தின் கடுமையான சோதனைகளை
எத்தனையோ கடந்தவள் நீ ,
கலங்குவதில் பயனில்லை
கம்பீரமாய் மீண்டு வா .............
ஊருக்கு உழைத்தவளே
ஓயாமல் உழைத்ததாலே
காலம் உனக்கு கட்டாய ஓய்வளித்திருக்கிறது -
இது நிரந்தரமல்ல தற்காலிகமே.............
பதவி சுகம் துறந்து
பகல் இரவு மறந்து
ஊருக்கு உழைத்த உழைப்புக்கெல்லாம்
பெரிய வெகுமதி காத்திருக்கிறது பின்னால் .............
விசுவாசிகளையும்
துரோகிகளையும் அடையாளம் காணும் நேரமிது
அச்சப்பட அவசியமில்லை
அனைத்தும் நன்மைக்கே ............
ஒளிசிந்தும் முகம் காண
ஒரு கோடி பிராத்தனைகள்
எல்லாம் நல்லதாகவே நடக்கும்
நன்மையே நடக்கும் .............
விதியைக்கூட விரட்டி அடிக்கும்
வலியை கொண்டவள் நீ
உன் புகழ் விரைவிலே
விண்ணோக்கும் ..............
மீண்டு வா மகளே மீண்டு வா ,
போராட்டம் உனக்கு புதிது இல்லை
மீண்டு வா மகளே மீண்டும் வா ............