தீப ஒளி திருவிழா

தீப ஒளி திருவிழா -இந்த
தீபாவளி திருநாள் .

தீமையை வதம் செய்து
நன்மைக்கு வித்திட்ட நாள்

நாமும் வதம் செய்வோம்
நாட்டின் அசுத்தத்தை ,
சாலையில் மரணத்தை,
சாதி வெறியாட்டதை,
காம கொடூரத்தை ,
காசுக்காக லஞ்சத்தை ,

ஒற்றுமை என்ற திரியிட்டு
அன்பு என்ற எண்ணையூற்றி
நம்பிக்கை என்ற ஒளியேற்றுவோம்
வேற்றுமை என்ற இருளை நீக்க ..

வெடி வெடித்து
காசைக் கரியாக்குவதைவிட்டு
இன்று ஒரு
செடி நட்டு காற்றின்
மாசை அகற்றுவோம்

இயற்கையோடு இயன்று
இன்பம் பல பெற்று
இனிதே என்றும் வாழ்ந்திட
இதயத்தோடு தொட்டு உறவாடும்
இதமான என் நட்பிற்கும் ..உறவிற்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.......

என்றும்....என்றென்றும்...
ஜீவன்

எழுதியவர் : Jeevan (29-Oct-16, 4:56 pm)
பார்வை : 138

மேலே