நான்
உன் கடைசி பார்வை
வாட்சப் சொல்லியது...
உன் கடைசி பகிர்வை
பேஸ்புக் சொல்லியது....
உன் அழகிய படத்தை
இன்ஸ்டாகிராம் சொல்லியது...
உன் தற்போதய
ஸ்டேடஸ் டுவீட்டர் சொல்லியது....
நீயில்லாத வெறுமையை
என் இன்பாக்ஸ் சொல்லியது..
நீயில்லாத பொழுதை
ஒரு மாதத்திற்கு முன்
வந்த ரிசிவ்டு கால்
சொல்லியது....
நான் இவ்வுலகில்
இல்லை என்று
உணர்த்தியது
ஒரு மாதத்திற்கு
பிறகு உன்னிடம்
இருந்து வந்த அழைப்பை
ஏற்க மறுத்து நான் ....
கவியுடன்
கிரிஜா.தி