நிம்மதி
![](https://eluthu.com/images/loading.gif)
நிம்மதி
*~~*~~*
ஆசையென்னும் கானல் நீரால்
நிறம்பிக்கிடக்கிறது அவன் கடல்
நிம்மதி நீர் ஒரு சொட்டுக்காய்
அவன் ஏங்கி அலைகிறான்
இசையரசியின் கட்டிலுக்குள்
அவன் சுருண்டு கிடக்க நினைக்கின்றான்
தூக்கத்தில் கட்டிலை தாண்டி
அவ்வப்போது கீழே விழுந்து விடுகிறான்
அந்த மாதரசிகள் போல்
தனக்கென விலையிட்டு கொண்ட
யோகம் அவன் தாகமோகத்தை
தணிக்கும் என்று நினைக்க
அது இறுதிவரை
அவன் ஆசைக்கினங்க மறுத்துவிடுகிறது
கவிதையை கைபிடித்து இழுக்கிறான்
துணைக்கு வா என
அது வழிதவறியவனுடன் வர மறுக்கிறது
சேரும் இடம் இருக்காதென
மதுவினால் நிரந்தர நிம்மதி
என்று நினைக்க
விடியல் அவனிடமிருந்து
அவளை அனுப்பிவிடுகிறது
நடன மங்கைக்கு
நட்பழைப்பு விடுக்க
மது கோப்பையுடன் இருப்பவனை
தள்ளிவிட்டு செல்கிறது
அவன் கடல்
பல குட்டிகளை போடுகிறது
குட்டிகளுக்கு பாலூட்ட
அதுவும் பெருத்து
பல குட்டிகளை போடுகிறது
அவன் பழகிக்கொள்ள வேண்டும்
சில குட்டிகளை பட்டினி போட ........
கூர்வாளும் கொப்பளித்த குருதியும் உள்ள
அவனை நான் பணிக்கிறேன்...
விருந்தினர் போல் அவ்வப்போது
பூ,பிஞ்சு,காய்,பழமென
அலையென வந்துசெல்லும்
பெருநகர மருத்துவமனையின்
பிணவறை வாயிலில்
ஒருநாள் முழுக்க நின்று விட்டு வா.....