அழகான பொய்

பொய் என்பது
நிஜமில்லாதது...
நிஜமென்பது
பொய்யில்லாதது...

சில நேரங்களில்
அழகான பொய்
நிஜத்தை விடவும்
இனிமையானது...

பல நேரங்களில்
அழகில்லா நிஜம்
பொய்யை விடவும்
கொடுமையானது..
😀👍

எழுதியவர் : இரா.சுந்தரராஜன், வீரசிகாம (31-Oct-16, 8:10 am)
Tanglish : azhagana poy
பார்வை : 104

மேலே