காதல் நடனம்
கண்கள் களிநடனம் புரிய
கட்டோடு மயில் தோகையென
கூந்தல் விளையாட
சிற்றிடை தாங்கும் கால்கள்
பரதம் தாங்கி வர
வண்ணக் கைகள்
அபிநயம் புரிய
மூடி திறக்கும் அதரங்கள்
யாழிசை ஆர்க்க
நாட்டிய மயூரியாய்
கன்னியவள் என் முன்னே
தோன்றினாள் அக்கணமே
கார்மேகம் கண்ட
ஆண் மயிலானேன்
அன்னவள் இடையை
அள்ளிப் பிடித்து
காதல் நடனம்
அரங்கேற்றினேன்
சோலைக் குயிலும் கிளியும்
எங்கள் நடனத்திற்கு சாட்சியாய் !