மகிழ்ச்சி வெள்ளமாய்ச் சோலை - ஆசிரியத் தாழிசை

சோலையின் பயிற்சிச் சோர்வைப் போக்கும்
காலையில் விழித்திடக் கவிதை நோக்க
மாலையின் முழுதுமே மகிழ்ச்சி வெள்ளமே !

தமிழ்மொழி சுவைதரும் தரமிகு மொழியென
அமிழ்தமாய்த் திகட்டா . ஆட்சி செய்திட
உமிழ்கிற இடமெலா முறவாய் வெள்ளமே !

செந்தமிழ்ப் புகட்டும் செந்நா நாவில்
பைந்தமி ழெழிலாய்ப் பாந்தமாய் நடக்கத்
தீந்தமிழ் மிகுதியால் திரண்ட வெள்ளமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Oct-16, 2:52 pm)
பார்வை : 53

மேலே