சமிக்சை
கூட்டம் நிறைந்த பஸ்ஸில்
இருக்கை கிடைக்காமல்
நின்று கொண்டே நோட்டம்
விட்டேன் காலியாகும்
இருக்கை தேடி.
என் பார்வைக்கணைகளில்
எதிர்ப்பட்டு அம்பொன்று
சிக்கியது.
"என்ன பார்வை உந்தன் பார்வை..."
எங்கோ ஒலித்து என்னுள் எதிரொலிக்க..
சட்டென்று எதிர் இருக்கை காலியாக,
அவள் கண்களில் இருந்து ஒரு சமிக்சை,
அங்கே அமரச்சொல்லி.
ஒற்றை புன்னகையுடன் ஓடிச்சென்று அமர்ந்ததும்
ஓரவிழியில் யோசித்தேன் யாசித்தேன்...
எங்கோ ஏற்கனவே பார்த்த முகம்...
எப்போது பார்த்தது? எங்கே?
யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்!
பலனளிக்காமல் மீண்டு வந்த நினைவில் பார்த்தால்
அந்த இருக்கையில் அவள் இல்லை..!
என்ன தான் ஆச்சு எனக்கு?
ஷ்.ஷ்..ஷு..