ஆறுதல் வேண்டாமே

முழுமதி எங்கும் நித்திரையாய் என் முகம் பார்க்கும் கண்ணாடியாய் தேடி அலைகிறேன் ஆறுதலை ...😞😞
என் காதோரத்தில் எனை மறந்து ஆட்சி செய்யும் இசைக்கு தான் எத்தனை வலிமை நினைப்பதை அப்படியே ஓப்பித்து விடுகிறது 😣😣
சத்தங்கள் குறைந்த பின் எங்கோ வானொலியில் தாலாட்டும் இரவு கானமும் என்னை அதன் வழி அழைக்கிறது 😔😔

நினைவுகளை அசை போட ஆயத்தமானேன் நிரந்தரங்களை நம்பாமல் என் அசைபோடலில் போலிகள் இல்லை , ஏமாற்றம் இல்லை , ஆறுதலாய் தலையனையும் கொஞ்சம் நினைவுகளுமே மிதமிஞ்சியது .,
கனவுகளும் , கற்பனைகளும் உறக்கங்களை உடைக்கும் திறவுகோல் 😴😴😴

எழுதியவர் : க.நாகராணி (31-Oct-16, 11:01 pm)
Tanglish : aaruthal vendaamey
பார்வை : 2662

மேலே