கனவு

ஏன் பிறந்தோம் என்ற அர்த்தம் தெரியாமலே இறந்து விடும் காதலுக்கு மத்தியில்...
பெற்றோர் சம்மதத்துடன் மணஉறுதி மேற்கொண்டோம்...
என் உணர்வுகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்ட ஒருவனிடம் என் எதிர்காலத்தையும் ஒப்படைக்கிறேன் காதலுடன்.......
என் உலகின் ஒவ்வொரு அசைவிலும், உள்ளத்தின் ஒவ்வொரு திசையிலும் உன் புன்னைகையே.....
உன் கரம் பற்றி அழகாய் காதல் சொல்ல ஆசை...!
உன் விழியில் என் முகம் பார்க்க ஆசை...!
உன் சிரிப்பில் என் கவலைகள் மறக்க ஆசை...!
தோழியாய் தலைக்கோதி ஆறுதல் கூற ஆசை... !
கூட்டநெரிசலிலும் உன் கரம் பற்றி பாதுகாப்பின் கதகதப்பை உணர ஆசை...!
சுவாசங்களாய் நாம் கலந்திருக்க ஆசை...!
தொலைவில் நீ இருந்தாலும், கைபேசியில் உன் குரல் கேட்டு தினம் விழித்திட ஆசை...!
சாரலில் உன்னுடன் சேர்ந்தே நனைய ஆசை...!
தென்றல் வீசும் மாலையில் உன்னுடன் சேர்ந்தே நடக்க ஆசை...!
மழலை மொழியில் உன் குரல் கேட்க ஆசை...!
உன் இதழோர புன்னகைக்கு காரணமாக ஆசை...!
கதிரவன் கதிரறுக்கும் காலை வேளையில் உன் அருகில் துயிலுரிக்க ஆசை...!
கவிதைகள் பல சொல்லி என்றும் காதலிக்க ஆசை..!

எழுதியவர் : ஆதர்ஷினி (1-Nov-16, 1:29 pm)
Tanglish : kanavu
பார்வை : 141

மேலே